2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

மதுரங்குளியில் இருமாடிக் கடைத் தொகுதி நிர்மாணிக்கும் பணி ஆரம்பம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
 
புத்தளம் பிரதேச சபைக்குட்பட்ட மதுரங்குளி நகரில் புதிய இருமாடிக் கடைத் தொகுதி நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
குறித்த புதிய கடைத் தொகுதிகளின் நிர்மாணப்பணிகளுக்கென 05 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் இருமாடிக் கடைத்தொகுதி நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், கீழ் மாடியில் 13 கடைகளும், மேல் மாடியில் 13 கடைகளுமாக மொத்தமாக 26 கடைத்தொகுதிகள் அமைக்கப்படவுள்ளன.
 
ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்படும் குறித்த நிர்மாணப்பணிகள், எதிர்வரும் நவம்பர் மாதம் நிறைவடையவுள்ளன. மதுரங்குளி நகரில் மிகவும் பழமைவாயந்த 11 கடைகள் முற்றாக அகற்றப்பட்ட அந்த இடத்திலேயே புதிய கடைத்தொகுதிகள் அமைக்கப்படவுள்ளதுடன், அதன் பணகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
குறித்த 11 கடைகளின் உரிமையாளர்களும் தற்காலிகமாக வாடகைக்கு கடைகளைப் பெற்று தமது வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
கட்டடத் தொகுதியின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்ததும், மேற்குறிப்பிட்ட 11 கடைகளின் உரிமையாளர்களுக்கு புதிய கடைத்தொகுதியில் கேள்வி மனுக்கோரலின்றி, கடைகள் வழங்கப்படுவதுடன், ஏனைய கடைகள் கேள்வி மனுக் கோரல் மூலம் வழங்கப்படவுள்ளதாக புத்தளம் பிரதேச சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X