Princiya Dixci / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துஷார தென்னகோன்
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை, வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த காவி உடை அணிந்த நபரை, சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன், வழக்கை எதிர்வரும் 20ஆம் திகதி ஒத்திவைத்து ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்தார்.
மீகஸ்வௌ பகுதியில் வருடாந்தம் நடைபெறும் ஆயுர்வேத வைத்திய பரிசோதனை, இவ்வருடம் மின்னேரிய மெதகிரிய பிரதேசத்தில் நடைபெற்றது.
இதன்போது, 42 வயதுடைய மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது, குறித்த பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என வைத்தியர்கள் பொலிஸாருக்கு அறிவித்தமையைத் தொடர்ந்து காவி உடை அணிந்த 50 வயதுடைய மேற்குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபரை, ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை (29) ஹிங்குராங்கொடை பொலிஸார் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு தீர்ப்பளித்தார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago