Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
வில்பத்து தேசிய வனாந்தரத்தின் எல்லையில் அமைந்துள்ள தப்போவ பாதுகாப்பு வனாந்தரத்தினுள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான பால மரக்குற்றிகளுடன் இருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
வண்ணாத்திவில்லு பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து புதன்கிழமை பொலிஸார் இம்முற்றுகையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வண்ணாத்திவில்லு விஜயபுரம் மற்றும் மொரபதாவ ஆகிய பிரதேசங்களைச் செர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் அவ்விடத்தை சுற்றிவளைத்த போது அங்கிருந்த மற்றொரு நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தப்பிச் சென்ற சந்தேகநபர் வண்ணாத்திவில்லு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் சட்டவிரோதமான முறையில் தப்போவ பாதுகாப்பு வனத்தினுள் நுழைந்து அங்கிருந்த மிகப் பழமையான பால மரத்தினை இரகசியமான முறையில் வெட்டி கம்புகளாக்கி ஏற்றிச் செல்ல தயாரான போதே பொலிஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.
மரக்குற்றிகளை ஏற்றப்பயன்படுத்தப்பட்ட டிரக்டர் வாகனமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 1219 சதுர அடி கொண்ட மரக்குற்றிகளின் பெறுமதி சுமார் ஐந்து இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள், வாகனத்துடன் புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஆயத்தங்களை வண்ணாத்தவில்லு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
25 minute ago
31 minute ago