Niroshini / 2016 ஏப்ரல் 18 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வன்னி அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் சனிக்கிழமை(16) புத்தளத்துக்கு விஜயம் செய்தார்.
புத்தளம் கற்பிட்டி கிராமத்துக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.
இதன்போது, மன்னார் வலயத்தின் கீழ் புத்தளத்தில் நடத்தபப்ட்டு வரும் ஐய்யூப் அரசினர் கலவன் பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் அடிப்படை தேவைகள் பற்றி நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதன்போது, குறித்த பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்திய நாடாளுமன்ற உறுப்பினர், குறித்த பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்து பார்வையிட்டதுடன், உரிய அதிகாரிகளுடன் பேசி மிக விரைவில் தீர்வுகளை பெற்றுத்தர முயற்சிப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago