எம்.யூ.எம். சனூன் / 2017 ஒக்டோபர் 16 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் ஸாஹிரா தேசிய கல்லூரியின் பழைய மாணவர் அமைப்பான சஹீரியன்ஸ் 99 குழுவினர் ஏற்பாடு செய்த மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் மற்றும் மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வுகள், புத்தளம் இபுனு பதூதா மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
சஹீரியன்ஸ் 99 குழுவினர் இரண்டாவது வருடமாகவும் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
உலகளாவிய ரீதியாக மாற்றுத்திறனாளிகளுக்காக உதவி வரும் ஜேர்மன் நாட்டை சேர்ந்த ஹேன்ஸ் பெட்டர் அன்னாரது துணைவியார் எலிசபத் மற்றும் இலங்கையின் இணைப்பாளர்களான ஜயசிங்க இளங்ககோன், சிதாரத் ஆகியோரின் உதவியுடன் இந்நிகழ்வு நடந்தேறியது.
புத்தளம், கல்பிட்டி, தலுவ, முந்தல், மதுரங்குளி, கனமூலை, நாகவில்லு, வேப்பமடு ஆகிய பிரதேசங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இதன்மூலம் பயன்பெற்றனர்.



24 minute ago
30 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
58 minute ago