Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 11 , பி.ப. 02:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவடங்குளம் குளத்தில் நேற்று திங்கட்கிழமை மீன் பிடிப்பதற்காகச் சென்ற நபரொருவர் , குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மங்களஎலிய, விஹேன்கட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நபர், நவடங்குளம் குளத்தில் மீன் பிடிக்கச் செல்வதாகக் கூறி காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்ற போதிலும் மாலையாகியும் வீடு திரும்பாததால் பிரதேசவாசிகளின் ஒத்துழைப்போடு தேடிப் பார்த்த போது, அவர், குளத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
பின்னர் உடனடியாக அவர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .