Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
எம்.இஸட்.ஷாஜஹான் / 2017 செப்டெம்பர் 01 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீர்கொழும்பு நகரின் பிரதான பஸ் நிலையத்துக்கு அருகில் சேவையில் ஈடுபடும், வரையறுக்கப்பட்ட தலாதூவ ஐக்கிய சாரதிகள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்களைப் பொருத்தும் வேலைத்திட்டம், இன்று (01) முற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நீர்கொழும்பு பிராந்தியத்துக்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் ஆகியோர் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
நீர்கொழும்பு நகரில் சேவையில் ஈடுபட்டுள்ள பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் மீற்றர்களைப் பொருத்தாமல் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இதன்காரணமாக பயணிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உல்லாச பயணிகள், நீர்கொழும்பு நகருக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். இவர்களிடம் சில முச்சக்கர வண்டிச் சாரதிகள் அதிக கட்டணத்தை அறவிடுகின்றனர். அத்துடன், நகரில் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கர வண்டிச் சாரதிகள் மீற்றர்களைப் பொருத்தாமையால், அதிக கட்டணத்தை அறவிடுவதாக நீண்ட காலமாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் , முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர்களைப் பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என்பது பலரதும் கருத்தாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
15 minute ago
19 minute ago