முஹம்மது முஸப்பிர் / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 04:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

அனுமதிப்பத்திரம் இன்றி ஆடுகளை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டியொன்றைக் கைப்பற்றியுள்ள முந்தல் பொலிஸார், அதிலிருந்து ஆடுகள் இரண்டு மீட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரைக் கைதுசெய்துள்ளனர்.
இன்று (15) காலை வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரே, இவ்வாறு இரண்டு ஆடுகளுடன் சென்ற முச்சக்கர வண்டியைக் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த முச்சக்கர வண்டி, முந்தல் பிரதேசத்திலிருந்து கொச்சிக்கடை பிரதேசத்துக்கு சட்டவிரோதமாக ஆடுகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்துள்ளது.
எனினும், இந்த ஆடுகளை வளர்ப்பதற்காகக் கொண்டு செல்வதாக கைதுசெய்யப்பட்ட இருவரும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இறைச்சிக்காகவே ஆடுகள் இவ்வாறு அனுமதிப்பத்திரமின்றி கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்காவின் தலைமையிலேயே, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

2 hours ago
6 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
9 hours ago