2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

முடக்கப்பட்டுள்ள போருதொட்ட மக்களுக்கு கிரிக்கெட் வீரர் மஹரூப் உதவி

Editorial   / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் தொற்றினால் ஒருவர் மரணமடைந்ததையடுத்து நீர்கொழும்பு கொச்சிக்கடை போருதொட்ட பிரதேசத்தில் ஆப்தீன் மாவத்தை இன்று  வெள்ளிக்கிழமை ஐந்தாவது நாளாக முடக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, முடக்கப்பட்டுள்ள ஆப்தீன் மாவத்தைக்கு  இன்று  வெள்ளிக்கிழமை இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள்  வீரரும் சகல துறை ஆட்டக்காரருமான பர்வீஸ் மஹ்ரூப் (குயசஎநநண ஆயாயசழழக) விஜயம் செய்து,  அங்குள்ள குடும்பங்கள் பலவற்றுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கினார்.


 கொரோனாவிலிருந்து பாதுகாப்பப் பெறுவதற்காக  அரசாங்கம்  மற்றம் சுகாதார அமைச்சு வழங்கியள்ள அறிவுறுத்தல்களை சகல மக்களும் பின்பற்ற  வேண்டும் எனவும் இலங்கையர்கள் என்ற வகையில் சகலரும் ஒன்றிணைந்து இந்த அபாயத்தை வெற்றிகொள்ள வேண்டும் எனவும் பொருளாதார ரீதியில் நலிவடைந்துள்ள மக்களுக்கு உதவ வேண்டும் எனவும்  கிரிக்கட் வீரர் பர்வீஸ் மஹ்ரூப்   வேண்டுகோள் விடுத்தார்.

 

--
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .