Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ஹிரான் பிரியங்கர / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்பிட்டி, உப்புவேலி பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று (17) ஏற்பட்ட மோதல் நிலைமையானது, பொலிஸாரின் தலையீட்டால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள எத்தால ஏரிப்பகுதியில் சிலர் அத்துமீறி நுழைந்து, தென்னங்கன்றுகளை நாட்ட முயன்ற போது, அப்பகுதி மக்கள் அதனை எதிர்த்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பிரதேசவாசிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், இரு தரப்பினர் மத்தியிலும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .