2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முச்சக்கரவண்டி விபத்து; மூவர் காயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 21 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

வண்ணாத்திவில்லு - புத்தளம் வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை முச்சக்கரவண்டியொன்று, விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளானதோடு வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரும் காயங்களுக்கு உள்ளாகியதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பாலத்துடன் அமைந்துள்ள வங்குவில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

நுரைச்சோலையைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், இஸ்மாயில்புரம் பிரதேசத்துக்குச் சென்று விட்டு முச்சக்கரவண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

இதன்போது வீதியில் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த நபரொருவரும் சிறு காயத்துக்கு உள்ளாகியுள்ளதோடு முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களுள் இருவர் பலத்த காயங்களுடன், புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X