2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மின் இணைப்பு வழங்க முடியாத பகுதிகளுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம்

Thipaan   / 2016 ஜனவரி 22 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள சகல வீடுகளுக்கும் மின்சார வசதிகளைப் பெற்றுக் கொடுக்கும் அரசின் வேலைத் திட்டத்தின் கீழ், மின்சார இணைப்பு வழங்க முடியாத கல்பிட்டி முகத்துவாரம் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சார வசதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றது.

இப்பிரதேசத்தில் சுமார் இருநூற்றைம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சார வசதியின்றி இருப்பதோடு, அவர்களுள் கணிசமானவர்களுக்கு நேற்றைய தினம் முதற்கட்டமான இந்த சூரியசக்தி மின் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு இந்த மின்சார உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில், மின்சாரம் மற்றும் புதுப்பிக்கப்படக் கூடிய சக்தி பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா, இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் எம். எச். எம். நவவி, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ். எச். எம். நியாஸ், முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் அண்டனி, புத்தளம் தொகுதி ஐ.தே.கட்சி அமைப்பாளர் எம். என். எம். நஸ்மி உட்பட மின்சார சபை அதிகாரிகள், அமைச்சு அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X