2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மான்களை வேட்டையாடியவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 06 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

வில்பத்து சரணாலயப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மான்களை வேட்டையாடி இறைச்சி பெற முற்பட்டவர்களில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து தப்பிச்சென்ற ஐந்து பேரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தின் போது 110 கிலோகிராம் நிறையுடைய மான் இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

ஏனைய சந்தேகநபர்களைத் தேடும் பணியில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸாரும் ஈடுபட்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X