Princiya Dixci / 2015 நவம்பர் 06 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
வில்பத்து தேசிய வனப் பாதுகாப்பு வலயங்களினுள் மிருகங்களை வேட்டையாடிய மூவரை, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதவானுமாகிய செல்வி பாரதி விஜேரத்ன, நேற்று வியாழக்கிழமை (05) உத்தரவிட்டார்.
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பிரதேசத்தின் முன்னாள் அரசியல்வாதியொருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
குறித்த பாதுகாப்பு வலயங்களினுள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்து மிருகங்களை வேட்டையாடி எடுத்துச்சென்று கொண்டிருந்த வேளை, 6ஆம் கட்டை பொலிஸ் வீதிச் சோதனைச்சாவடியில் வைத்து இச்சந்தேகநபர்கள் மூவரும் வண்ணாத்திவில்லு பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவ்வழியாக வந்த முச்சக்கரவண்டியொன்றை நிறுத்திச் சோதனைக்குட்படுத்திய போது அதனுள்ளிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் 12, ஒளி விளக்குகள் 8 உட்பட வேட்டையாடப்பட்ட உக்குலான் இறைச்சியுடன், உயிருடன் இருந்த ஆமையொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், வண்ணாத்திவில்லு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.




18 minute ago
20 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
20 minute ago
1 hours ago