2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

மாராவில துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடையவருக்கு தடுப்புக்காவல்

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

மாராவில, மூதுகட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றில் வைத்து நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை, 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யுமாறு மாராவில நீதிமன்ற நீதவான், நேற்று செவ்வாய்க்கிழமை (01) உத்தரவிட்டார்.  

கடந்த மாதம் 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இத்துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

கட்டுநேரி பிரதேசத்தைச் சேர்ந்த டப்ளியூ. கிரிசான் சம்பத் (வயது 33) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளதாகவும் இவரின் உறவினரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சந்தேகநபர், கைத்துப்பாக்கி மற்றும் அதற்குரிய ரவைகள் இரண்டுடன் சிலாபம் பிரதேசத்தில் வைத்து திங்கட்கிழமை (30) இரவு சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக மாராவில பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மாராவில பொலிஸார் குறித்த சந்தேகநபரை, மாராவில நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.  

மாராவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X