Gavitha / 2016 ஜனவரி 05 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
நாத்தாண்டி, கொட்டாரமுல்ல பகுதியில், கடவுச்சீட்டு மற்றும் விசா எதுவும் இல்லாமல், வீதியில் மேலாடை இன்றி அலைந்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரஜை ஒருவரை, கொஸ்வத்த பொலிஸார், இன்று செவ்வாய்க்கிழமை (05) அதிகாலை 1 மணிக்கு கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் குறித்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்தே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தான் ரஷ்ய நாட்டுப் பிரஜை என்றும் மொஸ்கோ நகரிலிருந்து இந்நாட்டுக்கு வந்ததாகவும் தனக்கு தற்போது 34 வயதாகின்றது என்றும் கைது செய்யப்பட்ட நபர், தாள் ஒன்றில் அரைகுறை ஆங்கிலத்தில் எழுதி பொலிஸாருக்குக் கொடுத்துள்ளார்.
தனக்கு ஆங்கிலம் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கடவுச்சீட்டு இல்லாமல், இலங்கையில் தங்கியிருப்பதற்கான விசா இல்லாமல் எவ்வாறு, எப்போது இங்கு வந்தார் என்பது குறித்து தெரியவில்லை என்றும் இவர் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும் அறிய முடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பிரஜையை, மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
3 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
1 hours ago
1 hours ago
3 hours ago