Princiya Dixci / 2015 ஒக்டோபர் 27 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து கடந்த சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட பெண், வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பெண்ணின் சடலம், நிர்வாணமான நிலையில் பாழடைந்த வீடொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டதோடு அச்சடலம், தனது மனைவியான டைட்டஸ் டேனியல் இந்திராணி (வயது 49) என்பவருடையது என அப்பெண்ணின் கணவரான எம். பண்டார (வயது 70) என்பவரினால் அடையாளம் காட்டப்பட்டிருந்தது.
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் புத்தளம் பிரதேசத்தில் யாசகம் பெற்று வந்தவர்கள் எனவும் அவ்விருவரும், சடலம் மீட்கப்பட்ட பாழடைந்த வீட்டுக்கு சுமார் 100 மீற்றர் தொலைவில் உள்ள மற்றொரு பாழடைந்த வீட்டில் தங்கியிருந்துள்ளதாகவும் ஆரம்பக்கட்ட பொலிஸார் விசாரணைகளில் தெரிய வந்தது.
இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை, குளியாபிட்டி வைத்தியசாலையில் இன்று திங்கட்கிழமை (27) இடம்பெற்றது.
இந்த அறிக்கையிலேயே குறித்த பெண், வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்தவர்கள் யார் என்ற விடயம் இதுவரைத் தெரியவில்லை எனத் தெரிவித்த புத்தளம் பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31 minute ago
50 minute ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
50 minute ago
01 Feb 2026