2025 மே 06, செவ்வாய்க்கிழமை

யானை சுட்டுக்கொலை; காவலாளியும் உயிரிழப்பு

Princiya Dixci   / 2016 ஜனவரி 26 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க

வனாதவில்லுவ, எலுவன்குளம் ரால்மடுவ பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி, யானையொன்றை சுட்டுக்கொலை செய்துவிட்டு, அந்த அதிர்ச்சியில் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக வனாதவில்லுவ பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டத்துக்குள், கடந்த 24ஆம் திகதி நுழைந்த காட்டு யானையையே அவர் தனது துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதேநேரம், அந்த அதிர்ச்சியில் அதே துப்பாக்கியால் தன்னையும் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

45 வயதுடைய சிவஞான சுந்தரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், வில்பத்துவ காட்டிலுள்ள யானையொன்றை கொலை செய்தமை தொடர்பாக புத்தளம் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கொன்று தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X