2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யானை தாக்குதலில் முதியவர் பலி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவையில் காட்டு யானையின் தாக்குதலில், காலிங்கஎல விஜயராஜபுரப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய ஏ.பி.சோமதாச என்ற முதியவர், இன்று வியாழக்கிழமை (13) காலை உயிரிழந்துள்ளதாக, பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

துவிச்சக்கரவண்டியில் சகோதரரின் வீட்டுக்குச் செல்லும் வழியிலேயே, அவர் இவ்வாறு யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகவும் பொலன்னறுவைப் பகுதியில் இவ்வருடத்தில் மாத்திரம், 19 பேர், யானைத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X