Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
கொழும்பிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த ரயிலில் மதுரங்குளி தொடுவா வீதியில் வைத்து புதன்கிழமை (23) மாலை விசேட தேவையுடைய மாணவணொருவன் மோதியதில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார் என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளியில் அமைந்துள்ள விசேட தேவையுடையவர்களுக்கான பாடசாலையில் கல்வி பயிலும் மதுரங்குளி, சுஹதகம பிரதேசத்தைச் சேர்ந்த ஈ.ஏ.சரித் மதுசங்க என்ற 16 வயது மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவன், பாடசாலையிலிருந்து வீடு திரும்புகையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் சடலம், பிரேத பரிசோதனைக்காக முந்தல் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் முந்தல் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago