2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

வடிகான் வசதியை ஏற்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம், ரத்மல்யாய பிரதேசத்தில் வடிகான் வசதியினை ஏற்படுத்தாமல் அல்காசிம் வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு எதிப்புத் தெரிவித்து ரத்மல்யாய மக்கள், இன்று வெள்ளிக்கிழமை (26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

குறித்த வீதியானது வடிகான் வசதியின்றி அமைக்கப்பட்டதன் பின்னர், தங்களது பிரதேசம், ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தில் மூழ்குவது வழமையாகிவிட்ட நிலையில், தொடர்ந்து குறித்த வீதியினை வடிகான் வசதியின்றி புனரமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

அல்காசிம் வீதியினை இடைமறித்து இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது பொதுமக்களது கையொப்பமும் பெறப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X