Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 31 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர், எம். என். எம். ஹிஜாஸ்
1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு, 25 வருடங்கள் நிறைவு பெறும் நிலையில் புத்தளத்தில் வாழும் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள், வெள்ளிக்கிழமை ஜூம் ஆத்தொழுகையின் பின்னர் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
வட மாகாணத்தில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு, 25 ஆவது ஆண்டு நிறைவு பெறுகின்ற போதிலும் இன்று வரை பாதிக்கப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், நஷ்டஈடு மற்றும் நீதி விசாரணகள் முறையாக நடை பெறவில்லை எனத் தெரிவித்தே, புத்தளம்- சிலாபம் பிரதான வீதியின் தில்லையடி- ரத்மல்யாயப் பகுதியில் சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் நடைபெற்றது.
வட மாகாண முஸ்லிம்கள் இவ்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜெனீவாவில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் அறிக்கையில் கூட வட மாகாண முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அநீதிகள் தொடர்பாக எந்தவொரு விடயமும் சுட்டிக்காட்டப்படவில்லை எனவும் இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தமது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வேண்டுகோள் விடுத்தனர்.
'ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரே! வடமாகாண முஸ்லிம்களை பலவந்தமாக வெளியேற்றி இனச்சுத்திகரிப்புச் செய்யப்பட்டமை மனித உரிமை மீறல் இல்லையா?', 'நல்லாட்சிஅரசே, யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வீடமைப்புத் திட்டம், மற்றும் நஷ்டயீடுகள் எப்போது? முஸ்லிம் அரசியல்வாதிகளே! ஆக்கபூர்வமான நடவடிக்கை எப்போது?', 'வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றியமை மனித இனத்துக்கு எதிரான ஒரு கறுப்பு ஒக்டோபராகும்',
'வெளியேற்றப்பட்டு 25 வருடங்களான யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் எப்போது?', 'அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவே, யாழ். முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்காக தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கை என்ன?' போன்ற பல்வேறு மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
58 minute ago
1 hours ago