Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 05 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் வசித்து வரும் இலங்கையர்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் எம்எச்.எம்.நவவி, நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04) இடம்பெற்ற, தேருநர்களைப் பதிவு செய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு ௯றினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“கல்வி மற்றும் தொழில் போன்ற காரணங்களுக்காக பல ஆயிரக்கணக்கான இலங்கையர்கள், வெளிநாட்டில் தங்கியிருக்கிறார்கள்.
“மத்திய கிழக்கு நாடுகள் உள்ளிட்ட ஏனைய நாடுகளில் வாழும் இலங்கையர்கள் தேர்தல் காலங்களில் வாக்களிக்கும் உரிமையை இழந்து வருகின்றனர்.
“இலங்கையர்கள், வெளிநாடுகளில் தொழில் புரிந்து வருவதால் நமது நாடு பொருளாதாரத்தில் ௯டுதல் நன்மைகளைப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக்கொடுப்பது அவசியமாகும்.
“நாம் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்கின்ற போது, அங்கு வாழும் இலங்கையர்கள் தமக்கு வாக்களிப்பதற்குச் சந்தர்பத்தை பெற்றுத் தாருங்கள் என்று கேட்கின்றனர்.
“ஆகவே, மதிய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் இலங்கையர்கள் தேர்தல் காலங்களில் அந்தந்தத் தூதரகங்களில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
“அத்தோடு, யுத்தம் காரணமாக கடந்த முப்பது வருடங்களாக புத்தளம் போன்ற மாவட்டங்களில் வாழும் பெரும் எண்ணிக்கையிலான வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முஸ்லிம்களும் வாக்குப் பதிவின்றி தற்போது கஷ்டப்படுகிறார்கள்.
“எனவே, வடக்கு முஸ்லிம் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.
புத்தளம் போன்ற ஏனைய மாவட்டங்களில் வாழும் வடபுல முஸ்லிம்களின் விருப்பத்துக்கு அமைய, அவர்கள் நிரந்தரமாக வாழும் மாவட்டங்களிலேயே அவர்களை நிரந்தர வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்” என்றார்.
4 minute ago
50 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
50 minute ago
59 minute ago