Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.யூ.எம். சனூன் / 2017 ஜூன் 15 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில், திருக்குறளை உலகுக்கு ஈந்த திருவள்ளுவர் பெருந்தகையின் திருவுருவச்சிலை அங்குரார்ப்பண வைபவத்தையொட்டி, விசேட ஊர்வலம், புத்தளம் நகர மத்தியில் இன்று (15) காலை இடம்பெற்றது.
திருவள்ளுவரின் திருவுருவச்சிலை, புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் பிரதிஷ்டை செய்யுமுகமாக புத்தளம் இந்து மகா சபையில் வழிபாடுகள், ஆரார்த்தி என்பன இடம்பெற்று அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் இணைந்து ஊர்வலமாக இந்து தமிழ் மகா வித்தியாலயத்துக்கு எடுத்து வரப்பட்டது.
இதன்போது மாணவர்களின் கோலாட்டம், கரகாட்டம் என்பனவும் இடம்பெற்றன. இதேவேளை இதன் பிரதான வைபவம் வியாழக்கிழமை மாலை புத்தளம் இந்து தமிழ் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .