2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Editorial   / 2018 ஏப்ரல் 22 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கரம்பை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (21) காலை, கல்பிட்டி பாலாவி வீதியில், கரம்பை பிரதேசத்தில் இடம்பெற்ற இவ்விபத்தில், பனையடிச்சோலை, மாம்புரி பிரதேசத்தைச் சேர்ந்த அக்பர் முஹம்மது ஜாபிர் (வயது 36) என்ற, இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

விபத்தில் உயிரிழந்த நபர், நேற்றுக் காலை 8.00 மணியளவில், தனது மோட்டார் சைக்கிளில், வீட்டிலிருந்து புறப்பட்டு, புத்தளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்துள்ள சொகுசு வான் ஒன்றில், இவரது மோட்டார் சைக்கிள் மோதியே, இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் தொடர்பான மரண விசாரணை, புத்தளம் - கல்பிட்டி பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம்.ஹிசாம் முன்னிலையில் இடம்பெற்ற​போது, அது, விபத்தினால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், சடலம், உயிரிழந்தவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், அண்மைய காலங்களில் இடம்பெற்ற விபத்துக்களில், இளம் வயதினரே அதிகம் உயிரிழந்துள்ளதாகவும், இளைஞர்கள் வாகனங்களைச் செலுத்திச் செல்லும் போது, மிகுந்த அவதானத்துடனும், கவனத்துடனும் செல்ல வேண்டும் என, சாரதிகளிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும், திடீர் மரண விசாரணை அதிகாரி ஹிசாம் இதன் போது தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X