ரஸீன் ரஸ்மின் / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

மன்னார், முருங்கன் கட்டையடம்பன் பிரதேசத்தில் இன்று (19) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முந்தல் கொத்தாந்தீவு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாரென, மடு பொலிஸார் தெரிவித்தனர்.
முந்தல், கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த பாருக் முகம்மது தில்ஷான் (வயது 20 ) எனும் இளைஞனே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தேங்காய் கொள்வனவு செய்வதற்காக கொத்தாந்தீவு கொலனி மற்றும் பெருக்குவற்றான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இருவர், சிறிய ரக லொறியொன்றில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு, மன்னாரை நோக்கிச் சென்றுள்ளனர்.
இதன்போது, குறித்த லொறி மன்னார் முருங்கன் கட்டையடம்பன் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதால் லொறி, வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த சிறிய கம்பத்துடனும், எதிரே வந்த டிப்பர் ஒன்றுடனும் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் காயமடைந்த லொறியில் பயணித்த இருவரும், முருங்கன் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், லொறியின் சாரதியான கொத்தாந்தீவு கொலனியைச் சேர்ந்த மேற்படி இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனவும், லொறியில் பயணித்த மற்றைய நபர் தொடர்ந்தும் முருங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவ்விபத்தில் குறித்த சிறிய ரக லொறியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், டிப்பர் வாகனத்துக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அத்துடன், உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா, மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, நீதவான் விசாரணையின் பின்னர், உறவினர்களிடம் இன்று மாலை ஒப்படைக்கப்பட்டது.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



55 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago