ரஸீன் ரஸ்மின் / 2017 ஓகஸ்ட் 12 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், வென்னப்புவ லுனுவில வைத்தியசாலைக்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
வென்னப்புவ, சாந்த ஆனாபுர பகுதியைச் சேர்ந்த ஏ.சந்திரா ( வயது 66) என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண், லுனுவில வைத்தியசாலைக்கு அருகிலுள்ள பாரசாரிக் கடவையை ஊடாக வீதியைக் கடக்க முற்பட்ட போது, கிரிமெட்டியான பிரதேசத்தில் இருந்து வென்னப்புவ பிரதேசத்தை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள், குறித்த பெண் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தால், வீதியை கடக்க முற்பட்ட பெண்ணும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவரும் காயமடைந்த நிலையில் லுனுவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், விபத்தல் காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக, மாரவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குறித்த பெண், நேற்று மாலை உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் தொடர்ந்தும் லுனுவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெண்ணின் சடலம், மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
9 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
10 Mar 2026