Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - பாலாவி பகுதியில் இன்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில், பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் அறுவர் காயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் சேவா மாவத்தை பகுதியைச் சேர்ந்த மதுரா எனிசியா (வயது 65) என்பவரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிச் சென்ற லொறியொன்றும், சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சிறிய ரக வான் ஒன்றும் மோதிக்கொண்டதிலேயே, இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
புத்தளத்தைச் சேர்ந்த ஆறு பெண்கள், இன்று (25) குறித்த வானில் சிலாபம் - போவத்தைப் பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்றுவிட்டு மீண்டும் புத்தளம் நோக்கிப் பயணித்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
வான் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையால், வான் கட்டுப்பாட்டையிழந்து, எதிரே வந்த குறித்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் படுகாயமடைந்த வான் சாரதி உட்பட ஆறு பெண்களும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .