Editorial / 2019 ஜூலை 10 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொஷான் துஷார தென்னகோன்
பொலன்னறுவை- வெலிகந்த பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகுல்பொக்குண, நாமல் கம ஆகிய கிராமங்களை ஊடறுத்து நேற்று (09) மாலை வீசிய பலத்த காற்றினால், பல வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
குறித்த இரண்டு கிராமங்களைச் சேர்ந்த 7 வீடுகளின் கூரைகள் காற்றினால் அள்ளுண்டுச் செல்லப்பட்டுள்ளதுடன், மகுல் பொக்குண உர களஞ்சியசாலையின் கூரையும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 10 நிமிடங்கள் மாத்திரமே, இவ்வாறு காற்று பலமாக வீசியதாக, குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், 8 மாதங்களின் பின்னரே தமக்கு மழை கிடைக்கப்பெற்றதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பொலன்னறுவை பகுதிகளில், நேற்று (09) மழை பெய்த போது, வானில் இருந்து ஐஸ் கட்டிகள் விழுந்ததை தாம் அவதானித்தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026
31 Jan 2026