Niroshini / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
சர்வதேச ரொட்டரி கழகத்தின் ரொட்டரி நிறுவனத்துக்கு (Rotary Foundation) 100 ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, நீர்கொழும்பு ரொட்டரி கழகம், வாகனப் பேரணி ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை நடத்தியது.
நீர்கொழும்பு மாநகர சபை முன்பாக ஆரம்பமான வாகனப் பேரணியில் 100 வாகனங்கள் பங்குபற்றின.
நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் அஜித் வீரசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பியலால் தசநாயக்க, பந்த கிரியே சோமவங்ச தேரர் ஆகியோர் வாகனப் பேரணியை ஆரம்பித்து வைத்தனர்.
நீர்கொழும்பு மாநகர சபை மைதானம் அருகில் ஆரம்பமான இவ்வாகனப் பேரணி நீர்கொழும்பு, பமுனுகம, வத்தளை, ஜா-எல, கந்தானை, திவுலப்பிட்டிய, கட்டானை ஊடாக மீண்டும் நீர்கொழும்பு வந்தடைந்தது.
ரொட்டரி கழகத்தின் மூலமாக இலங்கையில் பல்வேறு மக்கள் நல சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போலியோ தடுப்பு மருந்து வழங்கல், மூக்குக் கண்ணாடி வழங்குதல், சுகாதார சேவைகளை மேம்படுத்த பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை, சுத்தமான குடி நீர் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளமை, சிறுநீரக பாதிப்புக்கள் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்தமை, பாடசாலை அபிவிருத்திக்கு உதவியுள்ளமை உட்பட பல்வேறு சேவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தின் தலைவர் அஜித் வீரசிங்க தெரிவித்தார்.

3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago