Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Administrator / 2016 செப்டெம்பர் 26 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் பாலாவியில் அமைந்துள்ள முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கையகத்துடன் இணைந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடாத்திய புத்தளம் மாவட்ட பள்ளிவாயல்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கான விஷேட செயலமர்வொன்று ஞாயிற்றுக்கிழமை (25) புத்தளம் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்டச் செயலக முஸ்லிம் கலாசார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம்.இப்ஹாம் தலைமையில் இடம்பெற்ற குறித்த செயலமர்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் நூருல் அமீன், புத்தளம் மாவட்ட காதி மேன்முறையீட்டு நீதிபதி சட்டத்தரணி பிஷ்ருல் அமீன், அகில இலங்கை ஜம்மியதுல் உலமா புத்தளம் கிளைத்தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், புத்தளம் மாவட்ட பதில் நீதிவான் எம்.எம்.இக்பால், முகாமைத்துவ உதவியாளர் ஆர்.எம்.ஹபீல் உள்ளிட்ட சட்டத்தரணிகள், காதி நீதிவான்கள், முஸ்லிம் விவாக பதிவாளர்கள், புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், உலமாக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, 'பள்ளிவாசல் நிருவாகமும்,வக்ப் சட்டத்திட்டங்களும்', 'இஸ்லாமிய கண்ணோட்டத்தில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் கடமைகளும், பொறுப்புக்களும்' தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago