2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

விசேட தேவையுடையோருக்கான பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை

Princiya Dixci   / 2016 மார்ச் 07 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

புத்தளம், சவீவபுரம் பகுதியில் இயங்கும் விசேட தேவையுடையோருக்கான பாடசாலையை அபிவிருத்தி செய்வதற்கு புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த விசேட பாடசாலையில் தற்போது 30 மாணவர்கள் கல்வி கற்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, இப்பாடசாலையை சகல வசதிகளுடனும் அபிவிருத்தி செய்யும்போது மேலும் பல மாணவர்களையும் இதில் உள்வாங்க முடியும் எனத் தெரிவித்தார்.

இது பற்றிய மேலதிக தகவல்களை திரட்டும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, புத்தளம் பிரதேச செயலாளர் எம்.ஆர்.எம். மலிக், சயில்ட் விஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.ருமைஸ், புத்தளம் நகர சபையின்  நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக் உள்ளிட்ட  குழுவினர் வவுனியா வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனம் மற்றும் சீட் நிறுவனங்களுக்கு நேரில் விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தனர். 

மேலும், புத்தளம் பிரதேசத்தில் விசேட தேவையுடையவர்கள் 400 பேர்  இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் எம்.எச்.எம். நவவி, இவ்வாறானவர்களை, அபிவிருத்தி செய்யப்படும் இந்த பாடசாலைக்கு உள்வாங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X