Niroshini / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம் என். எம். ஹிஜாஸ், முஹம்மது முஸப்பிர்
புத்தளம்-மன்னார் வீதியின் 4ஆம் கட்டை பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட நால்வர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வண்ணாத்திவில்லு பிரதேசத்திலிருந்து புத்தளம் நோக்கி வந்த முச்சக்கர வண்டி,எதிரே வந்த உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வரும் படுகாயமடைந்துள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .