2025 மே 03, சனிக்கிழமை

ஹோட்டலில் தங்கியிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்


ஆராச்சிக்கட்டு- கருக்குப்பனை பிரதேசத்தில் அமைந்துள்ள சொகுசு ஹோட்டலில், ஓய்வு பெறுவதற்காக தங்கியிருந்த இளைஞன் நேற்று (26) மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே, இவ்வாறு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


குறித்த  இளைஞன், தனது நண்பர்கள் சிலருடன் ஓய்வு பெறுவதற்காக இரண்டு தினங்களுக்கு முன்னர் குறித்த பிரதேச சொகுசு ஹோட்டலுக்கு வந்து தங்கியியுள்ளார். இந்நிலையில், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழித்துவிட்டு இரவு உறங்கச் சென்ற பின்னர், அதிகாலையில் தனது நண்பன் உயிரிழந்துக் காணப்பட்டதை அவதானித்த ஏனைய நண்பர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

 சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளதுடன், பிரேதப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டுச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில், ஆராச்சிக்கட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X