Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2016 மார்ச் 13 , மு.ப. 10:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
புத்தளம் மாவட்டத்துக்கு நேற்று (12) மாலை விஜயம் செய்த கிழக்குமாகாண முதலமைச்சரும் முஸ்லிம் காங்கிரஸ் பிரதி தலைவருமான செய்னுலாப்தீன் நசீர் அஹமட், நுரைச்சோலை, முசல்பிட்டி கிராமம், பள்ளிவாசல் துறை, கற்பிட்டி உள்ளிட்ட பிரதேச மக்களை சந்தித்து அம்மக்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.
இச்சந்திப்பின்போது, கடந்த காலங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் இன்னும் நிரந்தர வீடு, குடிநீர், போக்குவரத்து பாதைகளின் சீரின்மை, தொழில் வசைதில்லாது படும் அவலநிலைகள் போன்ற பல பிரச்சினைகள் குறித்து அப்பிரதேச மக்கள் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.
இதனை கேட்டறிந்த முதலமைச்சர், பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் முகமாக அம்மாகாண முதலமைச்சர், அமைச்சர்கள், மத்திய அரசாங்க அமைச்சர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று சிறந்த தீர்வுத்திட்டத்தினை தான் பெற்றுத்தருவதாகவும் முதலமைச்சரால் உறுதியளிக்கப்பட்டது.
மேலும், எதிர்வரும் 19 ஆம் திகதி அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச பாலமுனை கிராமத்தில் இடம்பெறவுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தேசிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கள் வருகை தரவுள்ளதால் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் இணைந்துகொண்டு குறித்த விடயம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடி அதற்கான தீர்வினையும் பெற்றுத்தருவதாகவும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago
2 hours ago