Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
நாடு சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கடந்தும் கூட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் வெற்றிக்குப் பின்பே இந்த நாட்டு மக்கள் பூரண சுதந்திரக் காற்றினை அனுபவிக்கத் தொடங்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.
புத்தளம் பிரதேச செயலகமும் புத்தளம் செம்புக்குளம் இக்ரா கிராம அபிவிருத்திச் சங்கமும் இணைந்து நடத்திய கலை, கலாசார நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புத்தளம் மணல்குன்று முஸ்லிம் மஹா வித்தியாலய மைதானத்தில் திங்கட்கிழமை (15) ந மாலை டைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
உண்மையான சுதந்திரம் இன்றித் தவித்த எமக்கு இந்த நல்லாட்சியிலேயே பூரண சுதந்திரம் கிடைத்துள்ளது.
புத்தளம் நகரமானது புண்ணிய பூமியாகக் கருதப்படுகிறது. குவேனி அரசி வாழ்ந்த பூமியாகவும், இபுனு பதூதா வியாபார நோக்கத்துக்காக வந்து சென்ற பூமியாகவும் இந்த புத்தளம் பூமி கருதப்படுகிறது. 1990களில் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு புத்தளம் நகர் நோக்கி 124,000 மக்கள் அணி அணியாக வந்த போது அவர்களுக்கு உண்ண உணவுகள் வழங்கி, உடுத்த உடைகள் வழங்கி ஆதரித்த பூமி இது.
நாடு நமக்கு என்ன செய்தது என எதிர்பார்க்காமல் நாம் நாட்டுக்கு என்ன செய்தோம் என்பதை சிந்திக்க வேண்டும். கல்விக்கு நாம் அனைவரும் உந்து சக்தியாக திகழ்ந்து கல்வி அறிவுள்ள ஒரு சமூகத்தை உருவாக்குவோமானால் நாட்டுக்குத் தேவையான நற்பிரஜைகளை எம்மால் உருவாக்க முடியும் எனக் கூறினார்.
இக்ரா கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஏ.எச்.எம். நளீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், மணல்குன்று முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எம்.எச்.எம். ராசிக், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.எம். மு{ஹசி மற்றும் புத்தளம் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரி அபிவிருத்தி சங்க செயலாளர் ஜே.எம். ஜௌசி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago