2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'ஒற்றுமையே வளர்ச்சிக்கு அடித்தளம்'

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம். சனூன்

எம்மை விட 50 வருடங்கள் பின்தங்கிய சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடையக் காரணம் அங்குள்ள அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் ஒற்றுமையே என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி தெரிவித்தார்.

திவிநெகும அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கல்பிட்டி பிரதேச பயனாளிகளுக்கு சுய தொழில் வேலைவாய்ப்புக்கான உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு  உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (19) காலை நடைபெற்ற இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு 30 இலட்சம் ரூபாய் பெறுமதியான தையல் இயந்திரங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் மீன்பிடி வலைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன. 

நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

நமது நாட்டில் மருத்துவம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இலவசமாகவே பொது மக்களுக்கு கிடைக்கின்றன. இது தவிர சமுர்த்தி உதவியின் மூலம் திருமண பந்தத்தில் இணைபவர்களுக்கு பண உதவிகள் கூட வழங்கப்படுகின்றன. சகலதையுமே இலவசமாகவே பெரும் எமக்கு வாழ்வில் எவ்வித முன்னேற்றத்தையும் காணக்கிடைப்பதில்லை.

எனவே, இத்தகைய உதவிகளை எதிர்பார்க்காமல் சுய நம்பிக்கையோடு உழைக்க முற்படுவோமானால் நாமும் முன்னேறலாம். நாடும் முன்னேறும். கொழும்பிலுள்ள பல உயர் தொழில் நிறுவனங்கள் ஆரம்பத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு கடுமையான உழைப்பின் பின்னரே முன்னேற்றம் கண்டது.

அயல் நாடுகளில் பொதுமக்கள் நாள்தோறும் 12 மணித்தியாலயங்கள் கடுமையாக உழைக்கின்றனர். ஆனால், எமது நாட்டில் நண்பகல் 12 மணிக்கு பின்னர் அலுவல்களைத் தீர்த்து கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். 

எனவே, இத்தகைய அரச உதவிகளை பெற்றுக்கொள்ளும் நீங்கள் இதன் மூலம் முன்னேற்றங்கள் கண்டு, நாட்டின் வளர்ச்சிக்கு பங்காளிகளாக மாறுவோம் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X