2025 மே 06, செவ்வாய்க்கிழமை

40 குடும்பங்களுக்கு வீடுகள்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

முந்தல் மற்றும் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற 40 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவில் 16 வீடுகளும் கல்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவில் 24 வீடுகளும் அமைக்கப்படுகின்றன.

வேள்ட்விஷன், ஹோல்சிம் மற்றும் திவிநெகும திணைக்களம் என்பவற்றின் பங்களிப்போடு இந்த வீடுகள் நிர்மாணித்துக் கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலச்சோலை கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் இவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட ஒரு வீடு நேற்று வியாழக்கிழமை மாலை உரிய குடும்பத்திடம் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X