Gavitha / 2015 ஒக்டோபர் 10 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன், எம்.எஸ்.எம். முசப்பிர்
புத்தளம் நகரில் கடந்த புதன்கிழமை, ஆறு வயது பாடசாலை சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இது தொடர்பான வழக்கில் சந்தேகநபருக்கு ஆதரவாக, சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகக்கூடாது எனக்கோரியும் புத்தளம் நகரில் நேற்று வெள்ளிக்கிழமை (09) ஜும்மா தொழுகையை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
புத்தளம் நகர மத்தியில் அமைந்துள்ள ஹிஜ்ரி 1400 ஞாபகார்த்த மண்டபத்துக்கு அருகில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சிறுமியின் தந்தை, குடும்ப உறவினர்கள், இடம்பெயர்ந்த மக்கள், புத்தளம் நகர முச்சக்கர வண்டி சங்க உறுப்பினர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சிறுவர் துஷ்பிரயோகத்தை முற்றாக ஒழித்து கட்டுவோம் என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

33 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
4 hours ago