Princiya Dixci / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- முஹம்மது முஸப்பிர்
முந்தல் நகரில் வைத்து மிருகவதைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதவான் பிணை வழங்கியதுடன், எதிர்வரும் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று செவ்வாய்க்கிழமை (13) உத்தரவிட்டார்.
திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு போதிய இட வசதியில்லாத லொறியில் 12 மாடுகளை ஏற்றிச் சென்ற இருவரும் நேற்று திங்கட்கிழமை (12) மாலை முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் முந்தல் நகரில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவ்வீதியால் பயணித்துக்கொண்டிருந்த லொறியை நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போதே குறித்த லொறியிலிருந்து 12 மாடுகளை மீட்ட பொலிஸார், சாரதி மற்றும் உதவியாளரைக் கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட லொறியுடன் கூடிய மாடுகளை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதுடன், சந்தேகநபர்களையும் நேற்று (13) புத்தளம் மாவட்ட நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.
33 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
4 hours ago