2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

21 மீனவர்கள் கைது

Administrator   / 2016 ஜனவரி 29 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

அனுமதிப்பத்திரமின்றி கல்பிட்டி மற்றும் சின்னப்பாடு பிரதேசங்களின்  ஆழ்கடலில் நேற்று வியாழக்கிழமை மாலை மீன்பிடியில் ஈடுபட்ட 21 மீனவர்களைக் கடற்படையினர்; கைதுசெய்ததாக புத்தளம் மாவட்ட கடற்றொழில் பணிப்பாளர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதன்போது, மீனவர்களினால் பிடிக்கப்பட்டிருந்த 3,800 கிலோ பாரை மீன்கள் உட்பட  06 படகுகள், லைலா வலை, ஜீ.பி.எஸ். உபகரணம் மற்றும் நீரில் மூழ்குவதற்கான  உபகரணங்களையும் கைப்பற்றியதாகவும் அவர் கூறினார்.

லைலா வலைகளைப் பாவித்து மீன்பிடியில் ஈடுபடுவதற்கு கடுமையான சட்டதிட்டங்களுடன்  கடற்றொழில் அமைச்சு அனுமதிப்பத்திரம் வழங்குகின்றபோதும், அவ்வாறான அனுமதிப்பத்திரம் எதுவும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடம்; இருந்திருக்கவில்லையென தெரியவருகின்றது.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களை கல்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடற்படையினர் ஒப்படைத்ததைத் தொடர்ந்து,  அவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அடுத்த முதலாம் திகதி கல்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X