2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

9 வயது சிறுமி வன்புணர்வு: மூவருக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 23 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பகுதியில் 9 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய மூவரை, எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மன்னம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 57,64 மற்றும் 74 வயதுடைய மூவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மேலுமொரு சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2014ஆம் ஆண்டு முதல் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை சிறுமி தொடர்ச்சியாக வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சிறுமி, பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X