2025 மே 21, புதன்கிழமை

மாதம்பை இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி - 2013

Super User   / 2013 ஏப்ரல் 09 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், மாதம்பையில் அமைந்துள்ள இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதிக்கான எழுத்து மற்றும் நேர்முக பரீட்சைகள் மே மாதம் 4ஆம் மற்றும் 5ஆம் திகதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுமென கல்லூரி அதிபர் உஸ்தாத் எம்.யூ.எம் றம்ஸி தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

"கல்லூரியின் கற்கை நெறியானது இரண்டு கட்டங்களைக் கொண்டதாகும். முதலாம் கட்டம் 3 வருடங்களைக் கொண்டதாகவும் இரண்டாம் கட்டம் 4 வருடங்களைக் கொண்டதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மூன்று வருடங்களைக் கொண்ட முதலாம் கட்டத்திற்காக இவ்வருடம் மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்கள் ஷரீஆப் பாடங்களுடன் கலை மற்றும் வர்த்தகத்துறையில் க.பொ.த உயர் தர கல்வியைத் தொடர வாய்ப்பளிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரி 1995.01.01 ஆம் திகதிக்குப் பின்னர் பிறந்தவராகவும் க.பொ.த சாஃத பரீட்சைக்கு  தோற்றி 3 பாடங்களில் சீ தரச் சித்தியுடன் கணிதம், தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

கணித பாடத்தில் சித்தியடையாதவர்களாயின் 5 பாடங்களில் சீ தரச் சித்தியுடன்  தமிழ் உட்பட மொத்தம் 6 பாடங்களில் சித்தியடைந்தவர்கள் மேற்படி முதலாம் கட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்" என்றும் குறிப்பிட்டார்.

மேலதிக தொடர்புகளுக்கு அதிபர் உஸ்தாத் எம்.யூ.எம் றம்ஸி – 0777706083, இஸ்லாஹிய்யா அறபுக் கல்லூரி – 0322247786 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .