2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

புத்தளம் விஞ்ஞான கல்லூரி மாணவர்கள் 20 பேர் பல்கலை செல்லும் தகைமையை பெற்றுள்ளனர்

Kogilavani   / 2011 டிசெம்பர் 26 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

 

க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியாகியுள்ள நிலையில் புத்தளம் விஞ்ஞானக் கல்லூரியிலிருந்து 20 மாணவர்கள்  பல்கலைக்கழக அனுமதி பெறுவதற்கான வாய்ப்புள்ளதாக விஞ்ஞானக் கல்லூரி அதிபர் ஐ.எல். சிராஜுதீன் தெரிவித்தார். 

இக்கல்லூரியிலிருந்து  முதன் முறையாக 49 மாணவர்கள்  உயர்தரப் பரீட்சைக்கு தோற்றினர்.

புத்தளத்தில் நிலவிய விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக இப்பிரதேசத்தின் விஞ்ஞான உயர்கல்வி நீண்ட காலமாக பாதிக்கப்பட்டு வந்தது.  இதனை   தீர்த்து வைக்குமுகமாக புத்தளம் நகர சபை தலைவர் கே. ஏ . பாயிஸின்  முயற்சியினால் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.  

புத்தளம் நகரில் உள்ள அனைத்து உயர்தர விஞ்ஞான மாணவர்களும் ஆசிரியர்களும்  ஒரு பாடசாலையின் கீழ் கொண்டு வரப்பட்டு  உயர்தர விஞ்ஞான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து அது ஒரு தனியான கல்லூரியாக உருவாக்கப்பட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  புத்தளம் விஞ்ஞானக் கல்லூரி  திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X