2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

கடும் காற்றினால் 7 வீடுகள் சேதம்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ்

புத்தளம் மாவட்டத்தின் இரு பிரதேசங்களில் வீசிய கடும் காற்று காரணமாக ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை வீசிய கடும் காற்று காரணமாகவே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கருவலகஸ்வௌ பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தேவநுவர பிரதேசத்தில் வீசிய கடும் காற்று காரணமாக ஒரு வீடு முழுமையாக சேதமுற்றுள்ளதுடன் 02 வீடுகள் பகுதியளவில் சேதமுற்றுள்ளன.

வணாத்தவில்லு பிரதேச செயலகத்துக்குட்பட்ட மயிலங்குளம் பகுதியில் வீசிய கடும் காற்று காரணமாக 04 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .