2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வடமத்திய மாகாணத்தில் 14 குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2013 ஜூலை 04 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்   

வடமத்திய மாகாணத்தில் பிரதான 14 குடிநீர் திட்டங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் சபையின் வடமத்திய மாகாண பொது முகாமையாளர் எஸ்.பீ.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாணத்திலுள்ள மக்களுக்கு சிறந்த குடிநீரை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனைப்படி நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரினால் பிரதான 14 குடிநீர் திட்டங்களை  இங்கு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி அநுராதபுரம் வடக்கு பிரதேச வாஹல்கட, மஹகனந்தராவ குளங்கள் ஊடாக ஆரம்பிக்கப்படவுள்ள குடிநீர் திட்டத்திற்காக 22,831 மில்லியன் ரூபா நிதி செலவாகுமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் ரம்பாவ, மதவாச்சி, பதவிய, கெப்பித்திகொள்ளாவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் ஹொரவப்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 278,446 பேர் நன்மையடையவுள்ளனர்.

மேலும், அநுராதபுரம் தெற்கு பிரதேச துருவில, நுவரவாவி மற்றும் திஸாவாவி ஊடான குடிநீர் திட்டத்தின் ஊடாக தலாவ, நொச்சியாகம, நாச்சியாதீவு, திரப்பனை, மத்திய நுவரகம் பிரதேசம், மிஹிந்தலை, மஹவிலச்சிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 139,420 பேர் நன்மையடையவுள்ளனர். இத்திட்டத்திற்காக 18,623 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படவுள்ளது.

மேலும், பழுகஸ்வெவ குடிநீர் திட்டத்திற்கு 2237.4 மில்லியன் ரூபா நிதியும் எப்பாவள குடிநீர் திட்டத்திற்கு 459 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, பொலன்னறுவை மாவட்டத்தில் மெதிரிகிரிய குடிநீர் திட்டத்திற்காக 1011 மில்லியன் ரூபா நிதியும் வெலிகந்த குடிநீர் திட்டத்திற்காக 2,776 மில்லியன் ரூபா நிதியும் ஹிங்குரங்கொட குடிநீர் திட்டத்திற்காக 1,299 மில்லின் ரூபா நிதியும் செலவிடப்படவுள்ளது.

அடுத்த ஐந்து வருட காலப்பகுதிக்குள் மஹவிலச்சிய குடிநீர் திட்டத்திற்காக 976 மில்லியன் ரூபாவும் கலென்பிந்தனுவெவ குடிநீர் திட்டத்திற்காக 1707.8 மில்லியன் ரூபா நிதியும் தமுத்தேகம குடிநீர் திட்டத்திற்காக 1805 மில்லியன் ரூபா நிதியும் லங்காபுர குடிநீர் திட்டத்திற்காக 1853 மில்லியன் ரூபா நிதியும் செலவிடப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக  சிறுநீரக நோய் அதிகரித்துக் காணப்படும் பதவிய, கெப்பித்திகொள்ளாவ, மதவாச்சி, ரம்பாவ, மெதிரிகிரிய, திம்புலாகல ஆகிய பகுதிகளில் பவுஸர் மூலம் குடிநீரை வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .