2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'149 வருட வரலாற்றில் 3087 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர்'

Suganthini Ratnam   / 2013 மார்ச் 22 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஆகில் அஹமட்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149 வருட வரலாற்றில் இதுவரையில் 3087 பொலிஸார் கொல்லப்பட்டுள்ளனர் என வடமத்திய மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  ஜகத் அபேசிரி குணரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தின் 149 வருடங்கள் பூர்த்தியாவதையிட்டு அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களத்தின் 11 அதிகாரிகள் உட்பட 2578 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 1991ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் சம்பவமொன்றில் ஒரே இடத்தில் 400 பொலிஸார் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். 

பொலிஸ் திணைக்களத்தால் பொதுமக்களின் நலன்கருதி பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுகின்றது எனவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  ஜகத் அபேசிரி குணரத்ன தெரிவித்தார்.



  Comments - 0

  • mohammad Friday, 22 March 2013 03:58 PM

    1864ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21ஆம் திகதி மாவனெல்லையில் குற்றவாளியொருவரைக் கைது செய்வதற்கு முற்பட்டவேளை துவான் சப்ஹான் எனும் முஸ்லிம் பொலிஸ் உத்தியோகத்தர் தன்னுயிரை இத் தாய் நாட்டுக்காக தியாகம் செய்தார். கடமை நேரத்தின் போது உயிர் தியாகம் செய்த முதலாவது பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு முஸ்லிம். இதன் மூலம் முஸ்லிம்கள் இந்நாட்டுக்காக தன் உயிரைக்கூட அர்ப்பணித்துள்ளார்கள் என சுட்டிக்காட்டப்படுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X