2025 மே 21, புதன்கிழமை

திவிநெகும மூலம் அநுராதபுரம் மாவட்டத்தில் 400 இலட்சம் ரூபா செலவிடப்பட்டது

Kanagaraj   / 2013 ஏப்ரல் 06 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ, சபூர்தீன்

திவிநெகும வேலைத்திட்டத்தின் கீழ் கடந்த வருடம் அநுராதபுரம் மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளுக்காக 400 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

விவசாயப் பிரிவிற்காக 245 இலட்சம் ரூபாவும், மிருக வளர்ப்பிற்காக 110 இலட்சம் ரூபாவும், கைத்தொழில் துறைக்காக 49 இலட்சம் ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.

விவசாய பிரிவின் கீழ் விதையினங்களை வழங்கியமை, தென்னங் கன்றுகளை விநியோகித்தமை, முந்திரி கன்றுகளை விநியோகித்தமை ஆகியனவும் மிருக வளர்ப்பை ஊக்குவித்தமை உள்ளிட்ட செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .