2025 மே 21, புதன்கிழமை

அநுராதபுரத்தில் 67 பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 29 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

அநுராதபுரம் மாவட்டத்தில் 67 ஆரம்ப பாடசாலைகளை அபிவிருத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் ஆலோசனைப்படி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இவ்அபிவிருத்தி திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் கீழ் அநுராதபுரம் கல்வி வலயத்திற்குட்ட 9 பாடசாலைகளும், கலென்பிந்துனுவௌ கல்வி வலயத்திற்குட்பட்ட 20 பாடசாலைகளும், கெக்கிராவ கல்வி வலயத்திற்குட்பட்ட 6 பாடசாலைகளும், கெப்பித்திகொள்ளாவ கல்வி வலயத்திற்குட்பட்ட 24 பாடசாலைகளும் தமுத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட 5 பாடசாலைகளும் இவ்வாறு அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

ஒவ்வொரு பாடசாலைக்கும் தலா 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதோடு இதன்கீழ் பாடசாலை வேலிகளைத் திருத்துதல், மின்சார வசதிகள், மலசலகூட வசதிகள், பாடசாலையின் பெயர் பலகை, ஆசிரியர் விடுதி என்பன அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .