2025 ஜூலை 07, திங்கட்கிழமை

1000 பாடசாலைகள் திட்டத்திற்குள் ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி

Kogilavani   / 2013 ஜூன் 06 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உத்தரவின் பேரில் புத்தளம், ஜனாதிபதி விஞ்ஞானக் கல்லூரி 1000 பாடசாலைகள் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக புத்தளம் நகர சபைத்தலைவர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

இதற்கான கடிதம் நேற்று புதன்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய பலகோடி ரூபா செலவில் இப் பாடசாலை அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதன் முதற் கட்டமாக 3 மாடிக்கட்டிடம் அமைக்கப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

பொதுவாக 6 ஆண்டு முதல் உயர்தரம் வரையிலான வகுப்புக்களினை உடைய பாடசாலைகளே 1000 பாடசாலை திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் உயர்தர வகுப்புக்களினை மாத்திரம் உடைய புத்தளம் விஞ்ஞானக் கல்லூரி 1000 பாடசாலை திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .